తమిళ మూలం: విలంగు

[అవినేని భాస్కర్ చేసిన జంతువు కవిత తమిళ మూలం: తెలుగు, తమిళ్ లిపులలో. తమిళుక్కు నీరం ఉండు (1997) కవితా సంపుటి నుండి.]

(“தமிழுக்கு நிறம் உண்டு” 1997 என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து)

విలంగు விலங்கு
మనిదా
విలంగై వణంగు

కుఱిప్పాగక్
కురంగై కుంబిడు

ఉన్
మూదాదైక్కు
ముదల్వణక్కం పోడు

ఒవ్వొరు
విలంగుం
ఉన్ ఆసాన్

కఱ్క
కట్రబిన్ నిఱ్క
అదఱ్కుత్ తగ

*

విలంగుగళ్ నమ్మినుం
మానముళ్ళవై

యానైయిన్ కాలిల్
యానై విళుందదాయ్త్
తగవల్ ఇల్లై

పూనైక్కు ఎలిగళ్
పల్లక్కుచ్ చుమందదిల్లై

కరడిక్కు మన్గళ్
కాల్పిడిత్తు విట్టదిల్లై

ఒండ్రు
సుదందిరత్తిన్ వానం

ఇల్లై
మరణత్తిన్ పళ్ళం

ఇడైప్పట్ట వాళ్క్కై
విలంగుక్కుక్కిల్లై

*

కాట్టుక్కుళ్
మూడనంబిక్కై ఇల్లై

అంగే
నెరుప్పుక్కోళి కూడ
తీమిదిప్పదిల్లై

*

మదం పిడిత్తలైయుం
మనిదా!

యానై తవిర
మట్ర విలంగెదఱ్కుం
మదం పిడిత్తదుండా?

ఒరు
కిఱిస్తవక్కిళి – ఇందుప్ పులి
సమణక్కొక్కు – బౌద్దప్పసు
సీక్కియచ్ సింగం – మగమదియమాన్

కాట్టుక్కుళ్ అడైయాళం
కాట్ట ముడియుమా?

*

మనిదా
నీ ఎన్నదాన్ ఒప్పనైసెయ్

పత్తు విరల్గళుక్కుం తంగం తరి
పార్త్తుప్ పార్త్తుప్ పట్టుక్కట్టు

మనిదజాదియిల్ పెణ్దాన్ అళగు

ఆణ్గళిల్ అళగు వేణ్డుమా?
విలంగైత్ తవిర వేఱువళియిల్లై

మాన్గళిల్ కొంబు
కలైమానుక్కు

యానైయిల్ తందం
కళిట్రుక్కు

మయిల్గళిల్ తోగై
ఆణ్ మయిలుక్కు

కోళియిల్ కొండై
సేవలుక్కు

ఆణ్జాదిక్కు మరియాదై
నాట్టుక్కుళ్ ఇల్లై మనిదా
కాట్టుక్కుళ్తాన్

*

కలై ఉనక్కే సొందమెండ్రు
గర్వం కొళ్ళాదే

కలైయిన్ మూల వేర్ పార్

ఇంద బూమియిన్
ముదల్ పాడల్ –
కాట్రిన్ పాడల్

ఇరండాం పాడల్ –
అలైయిన్ పాడల్

మూండ్రాం పాడల్ –
కుయిలిన్ పాడల్

నాన్కాం పాడల్ దాన్ –
ఉన్బాడల్

కుయిలిన్ బావనైయిల్
నీ
పాడత్ తొడంగినాయ్

గురువై వణంగుమున్నే
కుయిలై వణంగు కుళందాయ్

*

మనిదా నీ మఱైందాల్
ఉన్నై వైత్తు ఎన్న సెయ్వదు?

ఉనదు కొళుప్పిల్
ఏళే ఏళు సోప్పు చ్ చెయ్యలాం

ఉనదు కరియిల్
ఒన్బదాయిరం పెన్చిల్ సెయ్యలాం

ఉనక్కుళ్ ఇరుక్కుం ఇరుంబిల్
ఒరే ఓర్ ఆణి సెయ్యలాం

విలంగిన్ విలై తెరియుమా
ఉనక్కు?

ఉయిర్ కళిత్తు
ఉడల్ కిడప్పినుం –

ఆబరణమాగుం
పులియిన్ నగం

ఎళుదుగోల్ ఆగుం
పుఱావిన్ ఇఱగు

కైప్పైయాగుం
పాంబిన్ తోల్

ఆణ్మై పెరుక్కుం
కాండామిరుగక్ కొంబు

పాదుగైయాగుం
మాట్టుత్తోల్

సెత్తబిఱగుం సేమిక్కత్తక్కదు
విలంగుదానెండ్రు విళంగినాయా?

*

మనిదా
కడవుళర్ వాగనం
కవనిత్తాయా?

ఒరు కడవుళ్ – కాళై కొండాన్
ఒరు కడవుళ్ – మయిల్ కొండాన్
ఒరు కడవుళ్ – ఎలి కొండాన్
ఒరు కడవుళ్ – కరుడన్ కొండాన్

ఎందక్ కడవుళైయుం
విలంగు సుమందదండ్రి
మనిదన్ సుమందదిల్లై

మనిదనైచ్ చుమక్కచ్ చొన్నాల్
కడత్తివిడువానెండ్రు
కడవుళుక్కుత్ తెరియాదా?

మనిదన్ కడవుళై నంబుగిఱాన్
కడవుళ్ మనిదనై నంబవిల్లై

*

వాళప్ పిఱందవర్గళే

ఉంగళ్
వాళ్క్కై ముఱైయై సట్రు
మాట్రుంగళ్

ఒరు మాఱుదలుక్కాగ –
నీంగళ్ కూవిచ్
చేవలై ఎళుప్పుంగళ్

తోళిల్ ఒరు కిళియోడు
అలువలగం సెల్లుంగళ్

మనఙ్ కవర్ంద పూనైయోడు
మదియ ఉణవు కొళ్ళుంగళ్

మనైవిక్కు
ఎత్తనై నాళైక్కుత్తాన్
పసైయట్ర పళైయ ముత్తం?

నాళై ముదల్
ముయల్ కుట్టిగళుక్కు
ముత్తం కొడుంగళ్

ఉంగళ్ పడుక్కైయిల్
ఒరు
మూండ్రాం తలైయణై
ముళైక్కట్టుం

అందక్
కుట్టిత్ తలైయణైయిల్
ఉంగళ్
కుట్టి నాయ్ తూంగట్టుం

సట్ట మండ్రత్తిల్
విలంగుప్ పిరచ్చనై పట్రి
ఒళుంగుప్ పిరచ్చనై ఎళుప్పుంగళ్

పసువిన్ కాంబుక్కు
వారం ఒరునాళ్
అరసాంగ విడుముఱై
అఱివియుంగళ్

సర్క్కస్ యానైయిన్ పందాట్టాత్తైత్
తడై సెయ్యుంగళ్

అదు
యానై ఇనత్తుక్కే
సర్వదేస అవమానం

విలంగుగళై మదియుంగళ్
అవైగళ్
మాఱువేడమిట్టుక్కొండ
మనిదర్గళ్

పరిణామ వళర్స్చియిన్
పాగంగళ్

విలంగుగళై నేసియుంగళ్
అవైగళ్
అన్బుక్కు ఏంగుం
ఐందఱివుక్ కుళందైగళ్

ఒరే ఒరు కేళ్వి
ఉళమారచ్ చొల్లుంగళ్
మనిదర్గళ్ వణంగుంబడి
సిల విలంగుగళ్ ఉండు
విలంగుగళ్ వణంగుంబడి
ఇంగు మనిదర్గళ్ ఉండా?

மனிதா
விலங்கை வணங்கு

குறிப்பாகக்
குரங்கை கும்பிடு

உன்
மூதாதைக்கு
முதல்வணக்கம் போடு

ஒவ்வொரு
விலங்கும்
உன் ஆசான்

கற்க
கற்றபின் நிற்க
அதற்குத் தக

*

விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை

யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை

பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை

கரடிக்கு மான்கள்
கால்பிடித்து விட்டதில்லை

ஒன்று
சுதந்திரத்தின் வானம்

இல்லை
மரணத்தின் பள்ளம்

இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்குக்கில்லை

*

காட்டுக்குள்
மூடநம்பிக்கை இல்லை

அங்கே
நெருப்புக்கோழி கூட
தீமிதிப்பதில்லை

*

மதம் பிடித்தலையும்
மனிதா!

யானை தவிர
மற்ற விலங்கெதற்கும்
மதம் பிடித்ததுண்டா?

ஒரு
கிறிஸ்தவக்கிளி – இந்துப் புலி
சமணக்கொக்கு – பெளத்தப்பசு
சீக்கியச் சிங்கம் – மகமதியமான்

காட்டுக்குள் அடையாளம்
காட்ட முடியுமா?

*

மனிதா
நீ என்னதான் ஒப்பனைசெய்

பத்து விரல்களுக்கும் தங்கம் தரி
பார்த்துப் பார்த்துப் பட்டுக்கட்டு

மனிதஜாதியில் பெண்தான் அழகு

ஆண்களில் அழகு வேண்டுமா?
விலங்கைத் தவிர வேறுவழியில்லை

மான்களில் கொம்பு
கலைமானுக்கு

யானையில் தந்தம்
களிற்றுக்கு

மயில்களில் தோகை
ஆண் மயிலுக்கு

கோழியில் கொண்டை
சேவலுக்கு

ஆண்ஜாதிக்கு மரியாதை
நாட்டுக்குள் இல்லை மனிதா
காட்டுக்குள்தான்

*

கலை உனக்கே சொந்தமென்று
கர்வம் கொள்ளாதே

கலையின் மூல வேர் பார்

இந்த பூமியின்
முதல் பாடல் –
காற்றின் பாடல்

இரண்டாம் பாடல் –
அலையின் பாடல்

மூன்றாம் பாடல் –
குயிலின் பாடல்

நான்காம் பாடல் தான் –
உன்பாடல்

குயிலின் பாவனையில்
நீ
பாடத் தொடங்கினாய்

குருவை வணங்குமுன்னே
குயிலை வணங்கு குழந்தாய்

*

மனிதா நீ மறைந்தால்
உன்னை வைத்து என்ன செய்வது?

உனது கொழுப்பில்
ஏழே ஏழு சோப்பு ச் செய்யலாம்

உனது கரியில்
ஒன்பதாயிரம் பென்சில் செய்யலாம்

உனக்குள் இருக்கும் இரும்பில்
ஒரே ஓர் ஆணி செய்யலாம்

விலங்கின் விலை தெரியுமா
உனக்கு?

உயிர் கழித்து
உடல் கிடப்பினும் –

ஆபரணமாகும்
புலியின் நகம்

எழுதுகோல் ஆகும்
புறாவின் இறகு

கைப்பையாகும்
பாம்பின் தோல்

ஆண்மை பெருக்கும்
காண்டாமிருகக் கொம்பு

பாதுகையாகும்
மாட்டுத்தோல்

செத்தபிறகும் சேமிக்கத்தக்கது
விலங்குதானென்று விளங்கினாயா?

*

மனிதா
கடவுளர் வாகனம்
கவனித்தாயா?

ஒரு கடவுள் – காளை கொண்டான்
ஒரு கடவுள் – மயில் கொண்டான்
ஒரு கடவுள் – எலி கொண்டான்
ஒரு கடவுள் – கருடன் கொண்டான்

எந்தக் கடவுளையும்
விலங்கு சுமந்ததன்றி
மனிதன் சுமந்ததில்லை

மனிதனைச் சுமக்கச் சொன்னால்
கடத்திவிடுவானென்று
கடவுளுக்குத் தெரியாதா?

மனிதன் கடவுளை நம்புகிறான்
கடவுள் மனிதனை நம்பவில்லை

*

வாழப் பிறந்தவர்களே

உங்கள்
வாழ்க்கை முறையை சற்று
மாற்றுங்கள்

ஒரு மாறுதலுக்காக –
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்

தோழில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்

மனங் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்

மனைவிக்கு
எத்தனை நாளைக்குத்தான்
பசையற்ற பழைய முத்தம்?

நாளை முதல்
முயல் குட்டிகளுக்கு
முத்தம் கொடுங்கள்

உங்கள் படுக்கையில்
ஒரு
மூன்றாம் தலையணை
முளைக்கட்டும்

அந்தக்
குட்டித் தலையணையில்
உங்கள்
குட்டி நாய் தூங்கட்டும்

சட்ட மன்றத்தில்
விலங்குப் பிரச்சனை பற்றி
ஒழுங்குப் பிரச்சனை எழுப்புங்கள்

பசுவின் காம்புக்கு
வாரம் ஒருநாள்
அரசாங்க விடுமுறை
அறிவியுங்கள்

சர்க்கஸ் யானையின் பந்தாட்டாத்தைத்
தடை செய்யுங்கள்

அது
யானை இனத்துக்கே
சர்வதேச அவமானம்

விலங்குகளை மதியுங்கள்
அவைகள்
மாறுவேடமிட்டுக்கொண்ட
மனிதர்கள்

பரிணாம வளர்ச்சியின்
பாகங்கள்

விலங்குகளை நேசியுங்கள்
அவைகள்
அன்புக்கு ஏங்கும்
ஐந்தறிவுக் குழந்தைகள்

ஒரே ஒரு கேள்வி
உளமாரச் சொல்லுங்கள்
மனிதர்கள் வணங்கும்படி
சில விலங்குகள் உண்டு
விலங்குகள் வணங்கும்படி
இங்கு மனிதர்கள் உண்டா?