ఏలే తొరచ్చామి
ఎంగడా ఒంగప్పన్
కళ్ళుక్కడై పోయిరుప్పాన్
కైయోడ కూట్టియాడా
వీట్ట ఇటిక్కిఱాగ
వెఱప్పాఘ నిక్కిఱాగ
ఓట్టప్ పిరిక్కిఱాగ
ఓడిప్పోయ్ కూట్టియాడా
సామిగళా! చామిగళా!
సర్కారు సామిగళా
చెలందిక్ కూడళిక్క
చీట్టువాంగి వందిగళా
చిత్తెఱుంబ నచుక్కత్తాన్
సీప్పేఱి వందిగళా
అరైచ్చెణ్టు వీడిడిక్క
ఆడర్వాంగి వందికళా
వెళ్ళాట్టు కాంబిల్
వెసంవడియ కనాక్కణ్డేన్
ఓడైయెల్లాం రత్తం
ఓడివర కనాక్కణ్డేన్
కాత్తు కఱుప్పాచ్చే
కణ్డ కనా పలిచ్చిరుచ్చే
ఎళ్ళు చెడిమేల
ఇడివందు విళుందిరుచ్చే
ముళ్ళెడుక్కప్ పోయిరుక్కుం
మూత్తవన కాంగలైయే
ఏళావదు పడిక్కప్పోన
ఎళైయవళుం కాంగలైయే
ఒత్తైయిల నానిరుందు
ఒలైక్కరిసి పోడైయిలే
వాయ్కరిసి కొణ్డువందు
వాసప్పక్కం నిక్కిఱాగ
ఎత్తి ఒదైచ్చాలే
ఇత్తువిడుం సువరుక్కు
గడప్పారై ఎదుక్కయ్యా
గవర్మెణ్టు ఆళుకళే!
నాన్పట్ట పాడు
నాయ్పడుమా పేయ్పడుమా?
కడైయుం తయిర్పడుమా?
కాంజివరమ్ తఱిపడుమా?
మున్సువరు ఎళుప్పత్తాన్
మూక్కుత్తి అడగువచ్చేన్
పిత్తాళ కొడంవిత్తు
పిన్సువరు కట్టివచ్చేన్
కదవుక్కు మరం వాంగ
కాసిల్ల రాసావే
కోణి కదవుచెంజి
కోట్టైక్కు మాట్టివిట్టేన్
చీట్టు పుడిచ్చి
చిత్తాళు వేలచెంజి
ఓట్ట కూటైక్కు
ఒరుపగుది ఓడువెచ్చేన్
కూటు కలచ్చాక్కా
కురువిక్కు వేఱమరం
వీడు ఇడిచ్చాక్కా
ఎంగళుక్కు ఏదు ఎటం?
అయ్యా ఎసమానే
అంజువెరల్ మోదిరమే!
పారకత్తి సొత్తుపత్తు
పారుమయ్యా కణ్తిఱందు
తణ్ణి పుడిక్క
తకరక్కొడం ఒణ్ణిరుక్కు
వీట్టవిడ వయసాన
వెళక్కమాఱు ఒణ్ణిరుక్కు
పత్తువెచ్చు పత్తవెచ్చ
పాత్తిరంగ రెణ్డిరుక్కు
ఎంపురుసన్ తింగమట్టుం
ఎవర్సిల్వర్ తట్టిరుక్కు
పోంగయ్యా పోంగయ్యా
పుణ్ణియమా పోకట్టుం
ఎన్వీట్టు నాయ్కుట్టి
ఇన్నైక్కుం తూంగట్టుం
అళుదాలుం ఏళసొల్లు
అంబలత్తిల్ ఏఱాదు
అరుగంపుల్ బుత్తిసొల్లి
అరువా కేక్కాదు
ఇడింగయ్య ఇడింగ
ఇత్తవీడు దానిడింగ
కూరై పిరిచ్చెఱింగ
కొడియెల్లాం అఱుత్తెఱింగ
కణ్ణాడిక్ కడైక్కుళ్ళ
కాట్టాన పుగుందదుపోల
మున్నాడి పిన్నాడి
ముళుసా నొఱుక్కిరుంగ
కడైసియిల ఒణ్ణుమట్టుం
కాల్పుడిచ్చి కేక్కఱన్యా
చీరట్టు పుడిప్పవరే
చెవిచాచ్చు కేళుమయ్యా
కొల్లైయిల ఎమ్మగదాన్
మల్లియప్పూ నట్టిరుక్కా
నీర్కుడిచ్చ కొడి ఇప్ప
వేర్పిడిచ్చు నిన్నిరుక్కు
పొత్తి వళత్త కొడి
పూప్పూక్కు మున్నాల
కత్తి ఎఱియాదిగ
కడప్పారై వీసాదిగ
ఆసైయిల వచ్చకొడి
అసంగామ ఇరుక్కట్టుం
అవవచ్చ మల్లిగదాన్
ఎవళుక్కో పూక్కట్టుం. |
ஏலே தொரச்சாமி
எங்கடா ஒங்கப்பன்
கள்ளுக்கடை போயிருப்பான்
கையோட கூட்டியாடா
வீட்ட இடிக்கிறாக
வெறப்பாக நிக்கிறாக
ஓட்டப் பிரிக்கிறாக
ஓடிப்போய்க் கூட்டியாடா
சாமிகளா! சாமிகளா!
சர்க்காரு சாமிகளா
செலந்திக் கூடழிக்கச்
சீட்டுவாங்கி வந்திகளா
சித்தெறும்ப நசுக்கத்தான்
சீப்பேறி வந்திகளா
அரைச்செண்டு வீடிடிக்க
ஆடர்வாங்கி வந்திகளா
வெள்ளாட்டுக் காம்பில்
வெசம்வடியக் கனாக்கண்டேன்
ஓடையெல்லாம் ரத்தம்
ஓடிவரக் கனாக்கண்டேன்
காத்து கறுப்பாச்சே
கண்ட கனாப் பலிச்சிருச்சே
எள்ளுச் செடிமேல
இடிவந்து விழுந்திருச்சே
முள்ளெடுக்கப் போயிருக்கும்
மூத்தவனக் காங்கலையே
ஏழாவது படிக்கப்போன
எளையவளும் காங்கலையே
ஒத்தையில நானிருந்து
ஒலைக்கரிசி போடையிலே
வாய்க்கரிசி கொண்டுவந்து
வாசப்பக்கம் நிக்கிறாக
எத்தி ஒதைச்சாலே
இத்துவிடும் சுவருக்கு
கடப்பாரை எதுக்கய்யா
கவர்மெண்டு ஆளுகளே!
நான்பட்ட பாடு
நாய்படுமா பேய்படுமா?
கடையும் தயிர்படுமா?
காஞ்சிவரம் தறிபடுமா?
முன்சுவரு எழுப்பத்தான்
மூக்குத்தி அடகுவச்சேன்
பித்தாளக் கொடம்வித்துப்
பின்சுவரு கட்டிவச்சேன்
கதவுக்கு மரம் வாங்கக்
காசில்ல ராசாவே
கோணிக் கதவுசெஞ்சு
கோட்டைக்கு மாட்டிவிட்டேன்
சீட்டுப் புடிச்சிச்
சித்தாளு வேலசெஞ்சி
ஓட்டக் கூடைக்கு
ஒருபகுதி ஓடுவெச்சேன்
கூடு கலச்சாக்காக்
குருவிக்கு வேறமரம்
வீடு இடிச்சாக்கா
எங்களுக்கு ஏது எடம்?
அய்யா எசமானே
அஞ்சுவெரல் மோதிரமே!
பாரகத்தி சொத்துபத்து
பாருமய்யா கண்திறந்து
தண்ணி புடிக்கத்
தகரக்கொடம் ஒண்ணிருக்கு
வீட்டவிட வயசான
வெளக்கமாறு ஒண்ணிருக்கு
பத்துவெச்சுப் பத்தவெச்ச
பாத்திரங்க ரெண்டிருக்கு
எம்புருசன் திங்கமட்டும்
எவர்சில்வர் தட்டிருக்கு
போங்கய்யா போங்கய்யா
புண்ணியமாப் போகட்டும்
என்வீட்டு நாய்க்குட்டி
இன்னைக்கும் தூங்கட்டும்
அழுதாலும் ஏழசொல்லு
அம்பலத்தில் ஏறாது
அருகம்புல் புத்திசொல்லி
அருவா கேக்காது
இடிங்கய்யா இடிங்க
இத்தவீடு தானிடிங்க
கூரை பிரிச்செறிங்க
கொடியெல்லாம் அறுத்தெறிங்க
கண்ணாடிக் கடைக்குள்ள
காட்டான புகுந்ததுபோல்
முன்னாடி பின்னாடி
முழுசா நொறுக்கிருங்க
கடைசியில ஒண்ணுமட்டும்
கால்புடிச்சிக் கேக்கறன்யா
சீரட்டுப் புடிப்பவரே
செவிசாச்சு கேளுமய்யா
கொல்லையில எம்மகதான்
மல்லியப்பூ நட்டிருக்கா
நீர்குடிச்ச கொடி இப்ப
வேர்பிடிச்சு நின்னிருக்கு
பொத்தி வளத்த கொடி
பூப்பூக்கு முன்னால
கத்தி எறியாதிக
கடப்பாரை வீசாதிக
ஆசையில வச்சகொடி
அசங்காம இருக்கட்டும்
அவவச்ச மல்லிகைதான்
எவளுக்கோ பூக்கட்டும். |