తమిళ మూలం: మా పీకల మీదుంచిన కత్తులు తీయండి

అవినేని భాస్కర్ అనువాద కవిత మా పీకల మీదుంచిన కత్తులు తీయండి తమిళ మూలం (కవి: ఇళాంగో కృష్ణన్).

తెలుగు లిపిలో


1.
ఎంగళ్ కేళ్విగళ్ ఎళిమైయానవై
యార్ సుడచ్ చొన్నార్గళ్?
నీంగళ్ ఒరు పిణం సావదఱ్కు మున్ తిండ్రదై పట్ఱి సొల్గిఱీర్గళ్

ఎంగళ్ కేళ్విగళ్ నేరడియానవై
అంద సిఱువన్ తీవిరవాదియా?
నీంగళ్ అంద పిణం ఎప్పది చెత్తదు
ఎండ్రు కాదైక్కడిక్కిఱీర్గళ్

ఎంగళ్ కేళ్విగళ్ కుళప్పం ఇల్లాదవై
ఎత్తనై పేరై కొండ్రీర్గళ్?
నీంగళ్ అంద పిణం ఒరు కాలత్తిల్ మూచ్చువిట్టు కొండిరుందదు ఎన నిఱువ తుడిక్కిఱీర్గళ్

యారుక్కు వేండుం
ఉంగళ్ పిణంగళిన్ పురాణం
యారుక్కు వేండుం
ఉంగళ్ అళుగియ ఉణ్మైగళ్

వాయ్ కిళిందు సెత్త ఎం తంగై
అవళై ఏన్ కొండ్రీర్గళ్?

వాళవే తొడంగాద ఎం తంబిగళ్
అవర్గళై ఏన్ కొండ్రీర్గళ్?

నాంగళ్ ఇదై కేట్పోం
ఇదై మట్టుమే కేట్పోం
ఇదై మట్టుమే కేట్టుక్కొండిరుప్పోం
ఉంగళ్ కాదుగళ్ సెవిడాగుం వరై
ఉంగళ్ అదిగారం పిణమాగుం వరై

2.
ఉంగళ్ కరుణైక్కు నండ్రి
అదఱ్కుళ్ళాగ ఆలైయై మూడ మున్‌వందదిఱ్కు
ఇరుపత్తు ఐందు పేర్ ఎన్గిఱార్గళ్
పదిమూండ్రు ఎన్గిఱార్గళ్
ఎణ్ణిక్కైయిల్ ఎన్న ఇరుక్కిఱదు

పసుక్కళ్ పాదుగాప్పాయ్ వాళుమ్ నాట్టిల్
అఱ్ప మానుడర్గళ్ ఎంగళుక్కు
ఇత్తుడనావదు విట్టీర్గళే పణ్ణాడిగళే దెణ్డం
ఆండైగళే దెణ్డం
మొదలాళిగళే దెణ్డం
ఏమాన్గళే దురైమార్గళే
రాజాక్కళే దెణ్డం దెణ్డం

వణంగుగిఱోం సామీ
ఎం విరైగళిల్ ఇరుందు పూట్సై ఎడుప్పీర్గళాగ
ఎం కురల్వళైయిలిరుందు కత్తియై అకట్ఱువీర్గళాగ
ఆడుగళ్ అఱుప్పుక్కు ఎప్పోదు వర వేండుం ఎన సొల్లుం
వణంగి వేండుగిఱోం
కొంజం వలి ఇల్లామల్
సాగడిప్పీరాగ ఎం అరసాంగమే

3.
పోరాట్టంగళుక్కు ఎల్లాం
ఏన్ పోకిఱీర్గళ్?
ఉంగళుక్కాగత్తానే
ఐ.పి.ఎల్ ఇరుక్కిఱదు
ఉంగళుక్కాగత్తానే
సినిమా ఇరుక్కిఱదు
ఉంగళుక్కాగత్తానే
టాస్మాక్ ఇరుక్కిఱదు
ఉంగళుక్కాగత్తానే
పేస్పుక్ ఇరుక్కిఱదు
ఉంగళుక్కాగత్తానే
యూటియూప్ ఇరుక్కిఱదు
అప్పుఱం
ఇంద పూంగాక్కళై ఎల్లాం పూట్టియా వైత్తోం?
ఉంగళై యార్ పోరాట్టంగళుక్కు పోకచ్చొన్నదు?
బీచ్గళై పోరాట్టకళమాక్కియదు యార్?

కాట్ఱు మాసుపడుకిఱదు
నీర్ మాసుపడుకిఱదు
నిలం మాసుపడుకిఱదు
పుట్ఱునోయ్ వరుకిఱదు
తుయరందాన్

అదఱ్కుత్తానే
కోయిల్గళ్ ఇరుక్కిండ్రన?
-ఉంగళుక్కాక కడవుళిటం పేస-
పూజారిగళ్ ఇరుక్కిఱార్గళ్
ఆయుదంగళ్ ఏందియ కడవుళ్గళ్ ఇరుక్కిఱార్గళ్
పిరార్దనై సెయ్యుంగళ్
మొట్టై అడిక్కలాం
అలగు కుత్తలాం
పాల్ కుడం సుమక్కలాం
కావడి తూక్కలాం
గిరివలం సెయ్యలాం
ఎత్తనై ఇల్లై నీంగళ్ సెయ్య (ఒరు నల్ల బక్తరాగ)

మను కొడుక్కలాం
మండ్రాడలాం
పేస్పుక్కిల్ వందు స్టేటస్ పోడలాం
కెంజి కదఱలాం
ఇరుమిక్కొండే వాళ్కైయై ఓట్టలాం
రత్త వాంది ఎటుత్తు సెత్తుంపోగలాం
ఎత్తనై ఇల్లై
ఒరు నల్ల తేసబక్తరాగ

పోరాట్టంగళుక్కు ఎల్లాం
ఏన్ పోగిఱీర్గళ్
నాంగళా ఉంగళై సుట్టోం?
నీంగళ్దాన్ సుడవైత్తీర్గళ్
పోరాడినీర్గళ్
సుట్టోం.

తమిళ లిపిలో

1.
எங்கள் கேள்விகள் எளிமையானவை
யார் சுடச் சொன்னார்கள்
நீங்கள் ஒரு பிணம் சாவதற்கு முன் தின்றதைப் பற்றி சொல்கிறீர்கள்
எங்கள் கேள்விகள் நேரடியானவை
அந்த சிறுவன் தீவிரவாதியா
நீங்கள் அந்தப் பிணம் எப்படிச் செத்தது
என்று காதைக்கடிக்கிறீர்கள்
எங்கள் கேள்விகள் குழப்பம் இல்லாதவை
எத்தனை பேரைக் கொன்றீர்கள்
நீங்கள் அந்தப் பிணம் ஒரு காலத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது என நிறுவத் துடிக்கிறீர்கள்
யாருக்கு வேண்டும்
உங்கள் பிணங்களின் புராணம்
யாருக்கு வேண்டும்
உங்கள் அழுகிய உண்மைகள்
வாய் கிழிந்து செத்த எம் தங்கை
அவளை ஏன் கொன்றீர்கள்
வாழவே தொடங்காத எம் தம்பிகள்
அவர்களை ஏன் கொன்றீர்கள்
நாங்கள் இதைக் கேட்போம்
இதை மட்டுமே கேட்போம்
இதை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்போம்
உங்கள் காதுகள் செவிடாகும் வரை
உங்கள் அதிகாரம் பிணமாகும் வரை

2.
உங்கள் கருணைக்கு நன்றி
அதற்குள்ளாக ஆலையை மூட முன்வந்ததிற்கு
இருபத்து ஐந்து பேர் என்கிறார்கள்
பதின்மூன்று என்கிறார்கள்
எண்ணிக்கையில் என்ன இருக்கிறது
பசுக்கள் பாதுகாப்பாய் வாழும் நாட்டில்
அற்ப மானுடர்கள் எங்களுக்கு
இத்துடனாவது விட்டீர்களே பண்ணாடிகளே தெண்டம்
ஆண்டைகளே தெண்டம்
மொதலாளிகளே தெண்டம்
ஏமான்களே துரைமார்களே
ராசாக்களே தெண்டம் தெண்டம்
வணங்குகிறோம் சாமீ
எம் விரைகளில் இருந்து பூட்ஸை எடுப்பீர்களாக
எம் குரல்வளையிலிருந்து கத்தியை அகற்றுவீர்களாக
ஆடுகள் அறுப்புக்கு எப்போது வர வேண்டும் எனச் சொல்லும்
வணங்கி வேண்டுகிறோம்
கொஞ்சம் வலி இல்லாமல்
சாகடிப்பீராக எம் அரசாங்கமே

3.
போராட்டங்களுக்கு எல்லாம்
ஏன் போகிறீர்கள்?
உங்களுக்காகத்தானே
ஐ.பி.எல் இருக்கிறது
உங்களுக்காகத்தானே
சினிமா இருக்கிறது
உங்களுக்காகத்தானே
டாஸ்மாக் இருக்கிறது
உங்களுக்காகத்தானே
பேஸ்புக் இருக்கிறது
உங்களுக்காகத்தானே
யூடியூப் இருக்கிறது
அப்புறம்
இந்தப் பூங்காக்களை எல்லாம் பூட்டியா வைத்தோம்
உங்களை யார் போராட்டங்களுக்கு
போகச்சொன்னது?
பீச்களை போராட்டகளமாக்கியது யார்
காற்று மாசுபடுகிறது
நீர் மாசுபடுகிறது
நிலம் மாசுபடுகிறது
புற்றுநோய் வருகிறது
துயரம்தான்
அதற்குத்தானே
கோயில்கள் இருக்கின்றன
-உங்களுக்காக கடவுளிடம் பேச-
பூசாரிகள் இருக்கிறார்கள்
ஆயுதங்கள் ஏந்திய கடவுள் இருக்கிறார்கள்
பிராத்தனை செய்யுங்கள்
மொட்டை அடிக்கலாம்
அலகு குத்தலாம்
பால் குடம் சுமக்கலாம்
காவடி தூக்கலாம்
கிரி வலம் செய்யலாம்
எத்தனை இல்லை நீங்கள் செய்ய (ஒரு நல்ல பக்தராக)
மனு கொடுக்கலாம்
மன்றாடலாம்
பேஸ்புக்கில் வந்து ஸ்டேடஸ் போடலாம்
கெஞ்சிக் கதறலாம்
இருமிக்கொண்டே வாழ்க்கையை ஓட்டலாம்
ரத்த வாந்தி எடுத்து செத்தும்போகலாம்
எத்தனை இல்லை
ஒரு நல்ல தேச பக்தராக
போராட்டங்களுக்கு எல்லாம்
ஏன் போகிறீர்கள்
நாங்களா உங்களைச் சுட்டோம்
நீங்கள்தான் சுடவைத்தீர்கள்
போராடினீர்கள்
சுட்டோம்