శబ్దాన్ని జయించి రా – మూల కవిత

సబ్దంగళ్ కడందు వా – వైరముత్తు.
సంపుటి: కొంజం తేనీర్ నిఱైయ వానం (కాస్త తేనీరు బోలెడంత ఆకాశం), 2003.

சப்தங்கள் கடந்து வா
— கவிப்பேரரசு வைரமுத்து
(‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து)

తెలుగు లిపిలో


అమైదియై కుళైత్తు కుళైత్తు
చమైత్త తపోవనం
పార్కుమ్ వెళిఎంగుం
పచ్చై ఆదిక్కమ్

కఱ్పుడై ప్పెండిర్ నెంజిల్
పుగముడియాద కాముగన్ పోల్
కాడు పుగవియలామల్

కదిరొళి తవిక్కుం
ఊర్చుట్రి కళైత్తువరుం కాట్రు
కిళైయేఱి ఇలైమీదు కణ్ణుఱంగుం
మళైత్తుళియో పనిత్తుళియో
మూంగిలిలై మూక్కుగళ్
సొట్టిక్కొండేయిరుక్కుం

నిష్టైయిలిరుందార్ మామునివర్
నెట్రిప్పొట్టిల్ ఉయిర్తిరట్టి

“మునిపుంగవ!
అడియేనై చీడనాయ్ ఆట్కొళ్వీరా?
ఉమదు పాదుగైక్కు పక్కత్తిల్
యానమర ఇడముండా?

జోడి సూరియ కణ్గళ్ తిఱందు
మునివర్ వినవినార్.

“యార్ నీ?”

తుఱవఱం పూనవంద
అరసన్ యాన్
పొన్నెండ్ర తిడత్తిరైయై
పెణ్ణెండ్ర జడత్తిరైయై
మణ్ణెండ్ర ఇడత్తిరైయై
ఞానవాళ్ కొండు తుణిత్తు విలక్కి
పొయ్ పొరుళ్ ఉలగు పుఱందళ్ళి
మెయ్ పొరుళ్ తేడి వందేన్

ఆట్కొళ్వీర్ అయ్యన్మీర్
కణగళ్ వళి ఆళ్మనం తుళావియ మునివర్
మెల్లియదోర్ కేళ్వి కేట్టార్:

“అప్పనే
ఎన్నెన్న ఓసైగళ్ నీ
వరుం వళియిల్ సెవియుట్రాయ్?

“పఱవైగళిన్ తాయ్మొళి కేట్టేన్
సరుగుగళ్ మీదు విలంగుగళ్ ఆడుం
సడుగుడు కేట్టేన్
ఊమై కరైయోడు నది నడత్తుం
ఓయాద పేచ్చువార్తై కేట్టేన్
పూక్కళిన్ తవం కలైక్కుం
వండినత్తిన్ వల్లోసై కేట్టేన్
కళిఱు తేడుం పిడియిన్
పిళిఱల్ కేట్టేన్”

మునివరిన్
జోడి సూరియన్‌గళ్ మూడిక్కొండన

“పక్కువం ఇల్లై మగనే
తక్కై తరై తొడాదు
ఇండ్రుపోయ్ చిల్లాండు సెండ్రువా!”

*
సిలఆయిరం సూరియన్‌గళై
పఱిత్తు ఎఱిందదు వానం

సిలకోడి పూక్కళై
ఉడైత్తు ఉదిర్తదు వనం
ఇరవుగళుం పగల్గళుం ఉరుగిఓడి కలందన
ప్రపంచ పేరాళియిల్

*
ఒరునాళ్..

పనియిన్ వెణ్మైయుం కంగులిన్ కరుమైయుం
వడియాదదొరు విడికాలైయిల్
మీండుం
అదేకురల్ అదేమొళి;

“మునిపుంగవ!
అడియేనై చీడనాయ్ ఆట్కొళ్వీరా?”
జోడి సూరియన్‌గళ్ మీండుం తిఱందన

“ఇప్పోదు సొల్!
ఎన్నెన్న ఓసైగళ్
వరుం వళియిల్ సెవియుట్రాయ్?”

“పిఱైవళరుం ఒలికేట్టేన్
విణ్మీన్గళ్ మొళికేట్టేన్
మొట్టుగళ్ మలరుం నుణ్ణొలి కేట్టేన్
విడియలై నోక్కి
ఇరవు నగరుం ఇసై కేట్టేన్
ఎనక్కుళ్
కణ్ణీర్ ఊఱుం ఓసై కేట్టేన్”

మునివర్ ఉదట్టిల్ ఞానప్పున్నగై ఒండ్రు
ఇళైయోడి విళుందదు

“ఉట్కార్
పాదుకైక్కు పక్కత్తిలల్ల
ఎన్ పులితోలిన్ మిచ్చత్తిల్”

*
కిళక్కే
విణ్మీన్‌గళై తుఱంద వానం
సూరియనై ఈండ్రు కొండిరుందదు.

తమిళ లిపిలో

அமைதியை குழைத்துக் குழைத்துச்
சமைத்த தபோவனம்

பார்க்கும் வெளிஎங்கும்
பச்சை ஆதிக்கம்

கற்புடைப் பெண்டிர்நெஞ்சில்
புகமுடியாத காமுகன் போல்
காடுபுகவியலாமல்
கதிரொளி தவிக்கும்

ஊர்சுற்றிக் களைத்துவரும் காற்று
கிளையேறி இலைமீது கண்ணுறங்கும்

மழைத்துளியோ பனித்துளியோ
மூங்கிலிலை மூக்குகள்
சொட்டிக்கொண்டேயிருக்கும்

நிஷ்டையிலிருந்தார் மாமுனிவர்
நெற்றிப்பொட்டில் உயிர்திரட்டி

“முனிபுங்கவ!
அடியேனைச் சீடனாய் ஆட்கொள்வீரா?

உமது பாதுகைக்குப் பக்கத்தில்
யானமர இடமுண்டா?

ஜோடிச் சூரியக் கண்கள் திறந்து
முனிவர் வினவினார்.

“யார் நீ?”

துறவறம் பூணவந்த
அரசன் யான்
பொன்னென்ற திடத்திரையை
பெண்ணென்ற ஜடத்திரையை
மண்ணென்ற இடத்திரையை
ஞானவாள் கொண்டு துணித்து விலக்கி
பொய்ப்பொருள் உலகு புறந்தள்ளி
மெய்ப்பொருள் தேடி வந்தேன்
ஆட்கொள்வீர் அய்யன்மீர்

கண்கள் வழி ஆழ்மனம் துழாவிய முனிவர்
மெல்லியதோர் கேள்வி கேட்டார் :

“அப்பனே
என்னென்ன ஓசைகள் நீ
வரும்வழியில் செவியுற்றாய்?

“பறவைகளின் தாய்மொழி கேட்டேன்

சருகுகள் மீது விலங்குகள் ஆடும்
சடுகுடு கேட்டேன்

ஊமைக்கரையோடு நதி நடத்தும்
ஓயாத பேச்சுவார்த்தை கேட்டேன்

பூக்களின் தவம்கலைக்கும்
வண்டினத்தின் வல்லோசை கேட்டேன்

களிறுதேடும் பிடியின்
பிளிறல் கேட்டேன்”

முனிவரின்
ஜோடிச் சூரியன்கள் மூடிக்கொண்டன

“பக்குவம் இல்லை மகனே
தக்கை தரை தொடாது

இன்றுபோய்ச் சில்லாண்டு சென்றுவா!”

*

சிலஆயிரம் சூரியன்களைப்
பறித்து எறிந்தது வானம்

சிலகோடிப் பூக்களை
உடைத்து உதிர்த்தது வனம்

இரவுகளும் பகல்களும் உருகிஓடிக் கலந்தன
பிரபஞ்சப் பேராழியில்

*

ஒருநாள்..
பனியின் வெண்மையும் கங்குலின் கருமையும்
வடியாததொரு விடிகாலையில்

மீண்டும்
அதேகுரல் அதேமொழி;

“முனிபுங்கவ!
அடியேனைச் சீடனாய ஆட்கொள்வீரா?”

ஜோடியச் சூரியன்கள் மீண்டும் திறந்தன

“இப்போது சொல்!
என்னென்ன ஓசைகள்
வரும் வழியில் செவியுற்றாய்?”

“பிறைவளரும் ஒலிகேட்டேன்
விண்மீன்கள் மொழிகேட்டேன்
மொட்டுகள் மலரும் நுண்ணொலி கேட்டேன்
விடியலை நோக்கி
இரவு நகரும் இசை கேட்டேன்
எனக்குள்
கண்ணீர் ஊறும் ஓசை கேட்டேன்”

முனிவர் உதட்டில் ஞானப்புன்னகை ஒன்று
இழையோடி விழுந்தது

“உட்கார்
பாதுகைக்குப் பக்கத்திலல்ல
என் புலித்தோலின் மிச்சத்தில்”

கிழக்கே
விண்மீன்களைத் துறந்த வானம்
சூரியனை ஈன்று கொண்டிருந்தது.